Sai Prem

Tamil Story-நாம் பார்க்கும் கண்ணோட்டம்

January 30, 2021 Sai Team Season 1 Episode 29
Tamil Story-நாம் பார்க்கும் கண்ணோட்டம்
Sai Prem
More Info
Sai Prem
Tamil Story-நாம் பார்க்கும் கண்ணோட்டம்
Jan 30, 2021 Season 1 Episode 29
Sai Team

Human value story on right conduct, refrain from judging others

http://saibalsanskaar.wordpress.com

Show Notes Transcript

Human value story on right conduct, refrain from judging others

http://saibalsanskaar.wordpress.com

நீதி – நேர்மை

உபநீதி – ஆத்ம விசாரணை

ஒரு இளம் தம்பதி, அழகான ஒரு வீட்டில் குடியிருக்க வந்தனர். மறு நாள் காலை, சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே அந்தப் பெண் அடுத்த வீட்டைப் பார்த்தாள். பக்கத்து வீட்டு பெண்மணி துணிகளை துவைத்து, வெளியில் கம்பியில் காயப் போட்டுக் கொண்டிருந்தாள். அவள் “அந்த துணிகள் சுத்தமாக இல்லை. அவளுக்கு துவைக்க சரியான முறை தெரியவில்லை” என்றாள்.

அவளுடைய கணவர், எல்லாவற்றையும் கவனித்து கொண்டு மெளனமாக இருந்தார். தினமும் அவர் மனைவி, அடுத்த வீட்டுப் பெண் செய்யும் வேலையில் குறை கண்டு பிடித்துக் கொண்டிருந்தாள்.

இப்படியே ஒரு மாதம் சென்றது. ஒரு நாள் காலை, வெளியில் துணிகள் சுத்தமாக துவைத்து உலர்த்தியதைப் பார்த்த இளம் பெண் ஆச்சரியப்பட்டாள். தன் கணவரிடம், “பார்த்தீர்களா? அடுத்த வீட்டுப் பெண் துணிகளை துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாள் போல் தோன்றுகிறது. யார் அவளுக்குக் கற்றுக் கொடுத்திருப்பார்கள்?” எனக் கேட்டாள்.  அதற்கு கணவர், “நான் இன்று காலை எழுந்தவுடன், நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை சுத்தம் செய்து வைத்தேன்” என்று கூறினார்.

வாழ்க்கையும் இத்தகையது தான். நாம் பிறரை பார்க்கும் கண்ணோட்டம், நாம் அணியும் கண்ணாடியை சார்ந்து இருக்கின்றது.

நீதி

  1. பிறரை ஒரு பொழுதும் எடை போடாதே. தூய்மையான மனதுடன், சரியான மனப்பான்மையுடன் வாழ்க்கையில் விஷயங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
  2. நம் பார்வை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை சார்ந்துள்ளது. மனதில் நினைப்பதுதான் வார்த்தைகளாக வெளியிலே வரும்.
  3. பிறரை எடைப் போட்டு குறை கூறும் முன், நம்மைப் பற்றி நாமே நினைக்க வேண்டும். நம் குறைகளை நாம் முதலில் உணர வேண்டும்.