Sai Prem

Tamil Story-மன்னிப்பது நல்லது, மறப்பது அதைவிடச் சிறந்தது

September 27, 2021 Sai Team Season 2 Episode 37
Tamil Story-மன்னிப்பது நல்லது, மறப்பது அதைவிடச் சிறந்தது
Sai Prem
More Info
Sai Prem
Tamil Story-மன்னிப்பது நல்லது, மறப்பது அதைவிடச் சிறந்தது
Sep 27, 2021 Season 2 Episode 37
Sai Team

Human value story in Tamil

http://saibalsanskaar.wordpress.com

Show Notes Transcript

Human value story in Tamil

http://saibalsanskaar.wordpress.com

நீதி – அன்பு

உபநீதி – கருணை / மன்னிப்பு

தலைசிறந்த விஞ்ஞானி ஐசக் நியூட்டன் அவர்கள், தினமும் பல மணி நேரம் வேலை செய்தார். இருபது வருடங்களாக, அறிவு பூர்வமான ஆராய்ச்சிகளை செய்த இவர், விளைவுகளை எழுதிக் கொண்டே வந்தார். ஒரு நாள், அவர் உலாவச் செல்லும் பொழுது, ஆராய்ச்சி ஏடுகளை மேஜை மேல் வைத்து விட்டுச் சென்றார். அவருடைய செல்ல நாய் “டைமண்ட்” அறையில் படுத்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, அது விளையாட்டுத்தனமாக மேஜை மேல் குதித்தது. இதனால், ஆராய்ச்சி ஏடுகள் மேல் மெழுகுவர்த்தி விழுந்து, அவையெல்லாம் தீப்பற்றி எரிந்தன. இருபது வருடங்களாக கஷ்டப்பட்டு எழுதின ஏடுகள், நிமிடங்களில் சாம்பலாகி விட்டன. நியூட்டன் திரும்பி வந்தவுடன் அதிர்ச்சியுற்றார். விலை மதிப்புள்ள ஏடுகள் சாம்பலாகி கிடந்தன. யாராக இருந்தாலும், மிகுந்த கோபத்துடன் நாயை அடித்திருப்பார்கள். ஆனால், நியூட்டன் நாயைத் தடவிக் கொடுத்து, பரிதாபத்துடன் பார்த்து, “டைமண்ட், நீ என்ன செய்திருக்கிறாய் என்று உனக்கே தெரியாது” என்று சொன்னார்.

சற்று கூட சலிப்பே இல்லாமல், மறுபடியும் அவர் எழுத ஆரம்பித்தார். நாயின் மேல் எவ்வளவு கருணை!! அவருடைய பரந்த மனப்பான்மை, அவரின் அறிவைப் போலவே சிறந்து விளங்கியது.

நீதி

உங்களுக்கு தீங்கு செய்தவர்களை மன்னிப்பது மிக கடுமையானது; ஆனால், மன உறுதி இருந்தால், அதுவும் சாத்தியமாகும். எல்லாவற்றையும் மறந்து நடப்பதற்கு பெருந்தன்மையும், முயற்சியும் வேண்டும். நாம் மன்னிப்பதற்கும், மறப்பதற்கும் கற்றுக் கொண்டால், எதிரிகள் யாருமே இருக்க மாட்டார்கள். எல்லோரிடமும் அன்பாகப் பழகத் தெரிந்து கொள்வோம்.

Source: http://saibalsanskaar.wordpress.com