Ramanan's Podcast
கேள்வி கேட்பதென்பது ஒரு கலை.
Use Left/Right to seek, Home/End to jump to start or end. Hold shift to jump forward or backward.
கேள்வி கேட்பதென்பது ஒரு கலை. அதற்குப் பதில் சொல்வதென்பது அதை விட பெரிய கலை.
பல அறியப்படாத விஷயங்கள் அறியப்பட, அனைவரின் மனதிலும் புரியப்பட காரணமாக அமைந்தது கேள்விகள் தான். அதனால் தான் கேள்விகளாலே ஒரு வேள்விகள் செய்வோம் என்பார்கள்.
கேள்விகளால் மனதில் உள்ள ஐயங்கள் களையப்பட்டு, மனம் அமைதியடைந்து நம்மையும் அடுத்த இலக்கை நோக்கி வெற்றிநடை போட வைக்கிறது.
'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை. பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதினாலே'என கேள்வியின் முக்கியத்துவத்தை கவிஞர் வாலி பாடல் மூலம் அழகாக உணர்த்துகிறார்.
கவியரசு கண்ணதாசனிடம் ஒருமுறை ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் என்ன வித்தியாசம் என கேள்வி கேட்ட பொழுது, சர்வாதிகாரத்தில் கேள்வி கேட்பது கடினம். ஜனநாயகத்தில் பதில் சொல்வது கடினம் என்றார்.