Ramanan's Podcast
பெற்றோர், பிள்ளைகள் உறவு
Use Left/Right to seek, Home/End to jump to start or end. Hold shift to jump forward or backward.
பெற்றோர், பிள்ளைகள் உறவு என்பது எந்தவொரு எதிர்பார்ப்போ, சுயநலமோ, உடன்படிக்கைகளோ அற்ற ஒர் உறவாகும்.
மற்ற உறவுகளைப் போன்று இடையில் கோர்க்கப்பட்டதல்ல.
அது ஆரம்பத்திலிருந்தே அன்பாலும், அரவனைப்பாலும் கட்டப்பட்ட சங்கிலியாகும். இந்த உறவு தான் அவன் மரணிக்கும் வரை தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தி ஆறுதல் தரக்கூடிய ஒன்றாகும்.
எல்லாக் கவலைக், கஷ்டங்களின் போதும் ஒரு தடவையாவது கடந்து போகும் ஒர் உறவு என்றால் அது பெற்றோர், பிள்ளைகள் உறவுதான்.
ஆனால் அது எப்பபோதும் சாத்தியமா என்ற கேள்வி தவிரக்க முடியாமல் எழுகின்றது.
சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டுகின்றனர்.
அவர்களுக்கு மத்தியில் தங்களுடைய அன்பை சிலரை விட சிலருக்கு அதிகமாகக் காட்டுகின்றனர். சிலரை உயர்த்தியும் சிலரைத் தாழ்த்தியும் பேசுவார்கள்.
குடும்பத்தில் உங்கள் பெற்றோர் உங்களுக்கும் உங்களின் சகோதர சகோதரிகளிடமும் பாரபட்சமாக இருந்தார்களா? இருகின்ரார்களா?அப்படி இருப்பின் எப்படி இருகின்றார்கள்?
பிள்ளைகள் பெற்றோரிடம் முதலில் எதிர்பார்ப்பது அன்பான , ஆறுதலான வார்த்தைகளை மட்டுமே .
ஆகவே உங்கள் அன்பையும், கண்டிப்பையும் எல்லா பிள்ளைகள் மீதும் சம அளவில் செலுத்துங்கள்.