Ramanan's Podcast

குப்பைகளால் நிரம்பி வழிகிறது உலகம்

Ramanan

Use Left/Right to seek, Home/End to jump to start or end. Hold shift to jump forward or backward.

0:00 | 8:37

உலகமே குப்பைகளால் நிரம்பி வழிகிறது. ஆனால், யாரோ உற்பத்தி செய்யும் கழிவுகள், வேறு யாருடையதோ பொறுப்பாகிறது. எல்லாவற்றையும் வியாபாரமாக்கும் மனிதனின் இழிநிலை, மனிதகுலத்தின் மாண்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.   இன்று உலகளாவிய கழிவு மற்றும் கழிவு நெருக்கடி தோன்றியுள்ளது,

உலக அளவில் உள்ள பெருங்கடல்களில் 171 லட்சம் கோடி 'பிளாஸ்டிக்' கழிவுகள் மிதந்து கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கழிவகற்றல் கடினமான பணி. கழிவுகளின் வகையும் தொகையும் அதைச் சவாலானதாக ஆக்கியுள்ளன.  

எமது எதிர்காலச் சந்ததிகளின் வளமான வாழ்வு குறித்துப் பேசுவதாக இருந்தால், முதலில் நாம், எமது கழிவுகள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் திறந்த மனதுடனும் நேர்மையாகவும் ஓர் உரையாடலை மேற்கொண்டாக வேண்டும். 

அதைச் செய்யத் தவறினால், எதிர்காலச் சந்ததிகளுக்கு நாம் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம்.