Ramanan's Podcast

மனஅழுத்தம் ( Strees ) நம்மை என்ன செய்யும்?

Ramanan

Use Left/Right to seek, Home/End to jump to start or end. Hold shift to jump forward or backward.

0:00 | 5:06

மனிதனாய் பிறக்கும் அனைவருக்குமே மன அழுத்தம் இருக்கும். 

ஏனென்றால், இன்றைய சூழலில் மனிதர்களிடம் பேசுவதை மறந்து இயந்திரங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

நாம் எல்லோருமே மகிழ்ச்சியாக, பிரச்னைகளே இல்லாத ஒரு வாழ்வை தேடிச் சென்று கொண்டிருக்கிறோம். 

அப்படியில்லாமல், பிரச்னைகளும் இருக்கும் அதுதான் வாழ்க்கை என்று உணர வேண்டும். 

சில பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. சில பிரச்னைகளுக்குத் தீர்வில்லை. சில பிரச்னைகளுடன் வாழப் பழகவேண்டும். 

எப்போதும் தனிமையாக இல்லாமல், யாராவது ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டும் அப்படி இருந்தால் மன அழுத்தங்களை குறைக்க முடியும்.

மனஅழுத்தம் ( Strees ) நம்மை என்ன செய்யும்? என்ன வேண்டுமானாலும் செய்யும். 

தூக்கமின்மையில் தொடங்கி, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் என ஒவ்வொன்றாக பல பிரச்னைகளை அள்ளி அள்ளிக் கொடுத்து, இதய நோய்கள் வரை கொண்டு வந்து நிறுத்திவிடும். 

இது உடல்ரீதியான பிரச்னை என்றால், மனம் நொறுங்கிப்போய் மனநல பாதிப்புகள் ஏற்பட்டு உயிர் துறக்கக்கூட காரணமாகிவிடும்.

சிகிச்சைகள் அளவுக்கு முக்கியத்துவம் தரக்கத்தது மன அழுத்தம் குறித்தான விழிப்புணர்வும். மன அழுத்தம் பற்றிய விழிப் புணர்வைப் பேரளவில் முன்னெடுத்துச் செல்வது இன்றைய காலகட்டத்தின் இன்றியமையாத தேவை.