Ramanan's Podcast

பழிவாங்குதல் எண்ணம் ஒரு மனிதனை மிருகமாக்கி விடுகிறது.

Ramanan

Use Left/Right to seek, Home/End to jump to start or end. Hold shift to jump forward or backward.

0:00 | 11:49

பழிவாங்குதல் எண்ணம் ஒரு மனிதனை மிருகமாக்கி விடுகிறது. 

இதனால் சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர். 

ஒருவர் பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்தால் அவருக்குள் கோபம், வெறுப்பு, பயம் போன்ற தீய உணர்வுகள் இருக்கும். ஒருவரை பற்றி ஒழுங்காக புரிந்து கொள்ளாமல் அவரை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தி கொள்வதே பழிவாங்குவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. 

பழிவாங்க நினைப்பவர்கள் தங்களைவிட பலவீனமாக இருப்பவர்களை மட்டுமே பழிவாங்க துடிப்பார்கள். 

ஏனென்றால் அவர்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதுவே தனக்கு மேல் இருக்கும் அதிகாரிகள் போன்ற நபர்களை பழிவாங்க மாட்டோம். 

ஏனென்றால் அவர்களால் நமக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதற்காக. எனவே பழிவாங்குதல் எண்ணம் மிருகத்திற்கு சமமாக கருதப்படுகிறது.

அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல்தான் பழிவாங்கும் உணா்ச்சியைத் தூண்டுகிறது என்று சமூக உளவியலாளா் யான் மெக்சீ கூறுகிறாா். 

பழிவாங்கும் உணா்ச்சி அதிகம் உள்ளவா்கள், அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றும் தாம் எல்லோர் கவனத்தில் இருக்க வேண்டும் என்றும் தம் நிலையிலிருந்து தாழ்ந்துவிடக் கூடாது என்றும் நினைப்பவா்களாகவும் இருப்பாா்கள் என்று அவா் கூறுகிறாா்